ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் பள்ளி ஆண்டு விழா
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849706.jpg?width=1000&height=625)
கோவை; ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் கோவை பள்ளியின், 2ம் ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. 'மாற்றத்தின் அலைகள்' என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டு விழா நிகழ்வு நடந்தது.
திரைத்துறை தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு, அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான டிஜிட்டல் மேடையில் மாணவர்கள் பாடல், ஆடல், நாடகம், தனிப்பாடல், குழுப்பாடல், என பல்வேறு கண்கவர் கலைநிகழ்வுகளை நிகழ்த்தினர். பள்ளி முதல்வர் சூரஜ்ரெகு, பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார். கல்வியாண்டில் சிறந்து விளங்கிய மாணவர்கள், பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீ வித்ய நாராயணா அறக்கட்டளை அறங்காவலர்கள் அனுதாபூனமல்லி மற்றும் ஆர்த்தி, ஆதித்யா கல்வி நிறுவனங்களின் தலைமை அதிகாரி சுப்ரதா சாட்டர்ஜி, பள்ளியின் கியூ விங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அங்கித் ஜெய்ஸ்வால் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும்
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஓட்டு எண்ணிக்கை துவக்கம்
-
டில்லியில் வெற்றி யாருக்கு? ஓட்டு எண்ணிக்கை 'விறுவிறு'
-
அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன்: டிரம்ப் திட்டவட்டம்
-
பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை
-
வெண்புகையாய் பனிமூட்டம்; சென்னையில் ரயில், விமான சேவைகள் பாதிப்பு
-
அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை