ஜாக்டோ - ஜியோ போராட்டம் வரும் 14ம் தேதி நடத்த திட்டம்
கோவை; பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 14ம் தேதி தாலுக்கா அளவில் போராட்டம் நடத்த, ஜாக்டோ - ஜியோ முடிவு செய்துள்ளது.
இது குறித்த ஆலோசனை கூட்டம், கோவையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார்.
ஜாக்டோ - ஜியோ மாவட்ட பொருளாளர் அருளானந்தம் கூறியதாவது:
பிரதான கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட, 12 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள தாலுகாக்களில், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்க உறுப்பினர்களும், திரளக பங்கேற்கின்றனர். 10ம் தேதி அனைத்து அரசு ஊழியர்களையும், தாலுகா அலுவலகங்களில் சந்தித்து, போராட்டத்துக்கு தயார் படுத்தும் கூட்டம் நடக்கிறது. இந்த போராட்டம் வாயிலாக, எங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதில், ஜாக்டோ - ஜியோ உறுதியாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார், மாவட்டச் செயலர் வேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஓட்டு எண்ணிக்கை துவக்கம்
-
டில்லி சட்டசபை தேர்தல்; பா.ஜ., முன்னிலை
-
அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன்: டிரம்ப் திட்டவட்டம்
-
பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை
-
வெண்புகையாய் பனிமூட்டம்; சென்னையில் ரயில், விமான சேவைகள் பாதிப்பு
-
அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை