பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவ முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக சமூக பணித்துறை மற்றும் பிம்ஸ் மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் பல்கலைக் கழக நுாலகத்தில் நடந்தது.

முகாமிற்கு, சமூக பணித்துறை தலைவர் அன்பு வரவேற்றார். துணைவேந்தர் தரணிக்கரசு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். பிம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரேணுஜி பாய் வர்கீஸ் முன்னிலை வகித்தார். களப்பணி ஒருங்கிணைப்பாளர் சாஹின் சுல்தானா, மருத்துவ சேவையின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

இதில், பிம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன், சுகாதார அறிவியல் கல்லுாரி முதல்வர் ஸ்வேதா ஊமன், பிசியோதெரபி பள்ளி முதல்வர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.

முகாமில், பொது மருத்துவம், எலும்பியல், காது, மூக்கு, தொண்டை, பொது அறுவை சிகிச்சை, தோல், பல், பிசியோதெரபி, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இ.சி.ஜி., எக்ஸ்ரே, சோனோ மேமோகிராம், பாப்ஸ்மியர் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடந்த முகாமில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Advertisement