சுமங்கலி ஜுவல்லர்ஸ் சார்பில் பட்டீசுவரருக்கு ஸ்வர்ண பந்தனம்

கோவை; பேரூர் பச்சை நாயகி உடனமர் பட்டீசுவரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சுமங்கலி ஜுவல்லர்ஸ் சார்பில், ரூ. 40 லட்சம் மதிப்பிலான ஸ்வர்ணபந்தனம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.

பேரூர் பட்டீசுவரர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 10ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கோவை சுமங்கலி ஜுவல்லர்ஸ் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் சார்பில், இறைவனுக்கு ஸ்வர்ணபந்தனம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. 400 கிராம் தங்கத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில், இந்த ஸ்வர்ண பந்தனம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவையில் 46 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சுமங்கலி ஜுவல்லர்ஸ் நிறுவனம், ஏராளமான கோவில்களுக்கு நன்கொடை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement