குட்கா விற்ற பெண் கைது

புதுச்சேரி: பெட்டிக் கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம், சண்முகாபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், குட்கா, பான்மசாலா, உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக எழுந்த புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான மேட்டுப்பாளையம் போலீசார், நேற்று முன்தினம் அப்பகுதி பெட்டி கடையில் சோதனை நடத்தினர்.

அப்போது, குட்கா பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து, பெட்டி கடை உரிமையாளர் சரசுவை, 60, போலீசார் கைது செய்தனர்.

Advertisement