அவருக்கு முதல்ல தண்ணீர் கொடுங்க; மேடையில் பேச்சை நிறுத்தி விட்டு பிரதமர் செய்த செயல்

1

புதுடில்லி: மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது, கட்சி நிர்வாகி ஒருவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதை பார்த்து, பிரதமர் மோடி செய்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்துள்ளது.


டில்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம்ஆத்மியை பா.ஜ., தோற்கடித்தது. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன், 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது.


இந்த வெற்றியை பா.ஜ.,வினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, டில்லியில் உள்ள பா.ஜ.,தேசிய தலைமை அலுவலகத்தில் வெற்றி விழா இன்று மாலை நடந்தது. அதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் டில்லி மக்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி, தொடர்ந்து உரையாற்றி வந்தார்.


அப்போது, அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகளில் ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது போல் காணப்பட்டார். உடனே பேச்சை நிறுத்திய பிரதமர் மோடி, அருகே இருந்தவர்களிடம், 'முதலில் அவருக்கு தண்ணீர் கொடுங்கள். தூங்குகிறீர்களா? அல்லது உடல்நலத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?' என்று கேட்டார். பிறகு, அங்கிருந்தவர்கள் தண்ணீர் கொடுத்த பிறகு, அந்த நபர் இயல்புநிலைக்கு வந்தார்.

அதன்பின்னர், பிரதமர் மோடி தொடர்ந்து பேசினார். இந்த நிகழ்வு அங்கிருந்த பா.ஜ.,வினரை நெகிழச் செய்தது.

Advertisement