டில்லி தேர்தல் -ஆம் ஆத்மி சறுக்கியது எங்கே?

ஆம் ஆத்மி சறுக்கியது எங்கே?

கடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ.,வை மண்ணை கவ்வ வைத்த ஆம் ஆத்மி, இந்த தேர்தலில் கடுமையான பின்னடைவை சந்தித்ததற்கு அங்கு, 'ஷீஷ் மஹால்' எனப்படும் முதல்வர் இல்லம், 34 கோடி ரூபாய்க்கு புனரமைக்கப்பட்டது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சாமானியனாக தன்னை காட்டிக் கொண்ட கெஜ்ரிவாலுக்கு, இந்த ஆடம்பர பங்களா எதற்கு என்ற கேள்வி எழுந்தது. மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டால் அக்கட்சியைச் சேர்ந்த கெஜ்ரிவால் உள்ளிட்டோர் சிறை சென்றதும், டில்லி மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. ஆம் ஆத்மி அரசு, கடந்த சில ஆண்டுகளாக ஆமை வேகத்தில் செயல்பட்டதும் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.



வெறிச்சோடிய கெஜ்ரி ஆபீஸ்

டில்லி சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை துவங்கியதும், ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள், தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியதும் கலைய ஆரம்பித்தனர். அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பிரபலங்களே மண்ணைக் கவ்வியதும் கட்சி அலுவலகம் வெறிச்சோடியது. இடம்: புதுடில்லி.

Advertisement