காயமடைந்தவருக்கு ஆறுதல்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3850116.jpg?width=1000&height=625)
திருப்பூர்: ஊத்துக்குளி அடுத்த பல்லகவுண்டம்பாளையம் அருகே கடந்த இரு நாள் முன்னர் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
கல்லுாரி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு காயமேற்பட்டது.
காயமடைந்தவர்கள் திருப்பூர், பெருந்துறை மற்றும் ஈரோடு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், கவுன்சிலர் ரவிச்சந்திரன் மற்றும் கட்சியினர் சந்தித்து ஆறுதல் கூறினர். அரசு தரப்பில் உரிய உதவிகள் பெற்றுத் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி, அவர்களுக்கு ஏற்பட்ட காயம் மற்றும் வழங்கப்படும் சிகிச்சை குறித்து, எம்.எல்.ஏ.,க்கு விளக்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement