டி.ஜெ., அகாடமியில் வடிவமைப்பு வார விழா 

கோவை: சர்வதேச வடிவமைப்பு வாரத்தை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒத்தக்கால்மண்டபம், டி.ஜே., அகாடெமி ஆப் டிசைன் கல்லுாரியில், நடக்கிறது. துவக்க விழாவில் உலக டிசைன் அமைப்பின் தலைவர் தாமஸ் கார்வி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

டி.ஜே., அகாடெமி ஆப் டிசைன் கல்லுாரியின் டீன் ரத்தன் கங்காதர், சுவீடன் நாட்டை சேர்ந்த லுன்த் பல்கலையின் தொழில்துறை வடிவமைப்பு பிரிவின் பேராசிரியர் ஜஸ்ஜித் சிங், பெங்களூரு போலெஸ் டிசைன் நிறுவனத்தின் நிறுவனர் மைகேல் போலெ, எல்.எம்.,டபிள்யு நிறுவனத்தின் தலைமை ஸ்ட்ரடஜி அலுவலர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வரும்14ம் தேதி வரை கல்லுாரி மாணவர்களுக்கு டிசைன் துறையில், உலக அளவில் தனித்துவம் மிக்க வல்லுனகள் வகுப்பு எடுக்க உள்ளனர். 17ம் தேதி வடிவமைப்பு துறை சார்ந்த பயிலரங்கம், 19ம் தேதி பள்ளி மாணவர்களுக்கான டிசைன் கண்காட்சியும் நடக்கிறது.

Advertisement