வீட்டு காவலில் வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் மெஹபூபா?
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3850394.jpg?width=1000&height=625)
ஸ்ரீநகர் ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோர் சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற லாரி டிரைவர் வசீமி மீர் என்பவரை, பாதுகாப்புப் படையினர் சமீபத்தில் சுட்டுக் கொன்றனர்.
அதே நாளில் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்து சென்ற போலீசார், அவரை சித்ரவதை செய்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த இரு சம்பவங்களையும் கண்டித்து, பாரமுல்லா மற்றும் கதுவா மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த சூழலில், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி மற்றும் அவரது மகள் இதிஜா ஆகியோர் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், இதிஜா நேற்று கூறுகையில், ''நானும், என் தாயும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளோம்.
''வசீமி மீர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற திட்டமிட்டிருந்தோம். அதை தடுக்கும் வகையில் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பின்னும் இங்கு நிலைமை மாறவில்லை,'' என்றார்.
![J.V. Iyer J.V. Iyer](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![GSR GSR](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)