டாக்டர்களே இல்லை! அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852170.jpg?width=1000&height=625)
சென்னை; சென்னை அருகே அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை, நோயாளிகள் தவிக்கின்றனர் என்று நடிகர் கருப்பு புகார் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை போரூரில் நகர்ப்புற சமுதாய அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கால் வலி காரணமாக காமெடி நடிகர் கருப்பு சிகிச்சை பெற சென்றுள்ளார். அவர் சென்றிருந்த நேரம் மருத்துவமனையின் உள்ளே டாக்டர்கள் யாரும் இல்லை என்று தெரிகிறது.
அதேநேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி ஒருவர் அங்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். டாக்டர்கள் இல்லாத காரணத்தால் அங்கு இருந்த மற்ற நோயாளிகள், மூதாட்டியை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்தவர்கள், கருப்புடன் இணைந்து அவர்கள் மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுடன் திடீரென வாக்குவாதத்தில் இறங்கினர்.
இதுகுறித்து கஞ்சா கருப்பு கூறியதாவது;லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு வேறு எங்கோ தனியாக கிளினீக் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.
இதுபற்றி மருத்துவத்துறை அமைச்சர் பேச வேண்டுமா? இல்லையா? வெறிநாய் கடித்து ஒருவர் வந்திருக்கிறார். மண்டை உடைந்து மாணவர் ஒருவர் வந்துள்ளார். மருத்துவர்கள் யாரும் இல்லை. இவ்வாறு அவர் கொதிப்புடன் கூறி இருக்கிறார்.
![Vijay Vijay](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Kjp Kjp](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Bahurudeen Ali Ahamed Bahurudeen Ali Ahamed](https://img.dinamalar.com/data/uphoto/147532_171602279.jpg)
![சுந்தரம் விஸ்வநாதன் சுந்தரம் விஸ்வநாதன்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![அசோகன் அசோகன்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Admission Incharge Sir Admission Incharge Sir](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
மேலும்
-
திரிஷாவின் சமூக வலைதள கணக்கு கைப்பற்றியது யார்?
-
விமானத்தில் சென்று வருவதால் செலவு குறைவு: சொல்கிறார் இந்திய வம்சாவளி பெண்
-
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம்
-
சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு
-
மோசடி கணக்குகளை அடையாளம் காண ஏ.ஐ., திட்டம்: அமித் ஷா
-
அதிவேக ரயில் கேரளாவுக்கு தேவையில்லை: மெட்ரோமேன் ஸ்ரீதரன் பரிந்துரை