சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852180.jpg?width=1000&height=625)
மும்பை: இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிப்டி 23,100 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. வர்த்தக முடிவில், நிப்டி 23,100 க்குக் கீழே இருந்தது. நிப்டி 50 குறியீட்டில், 4 பங்குகள் பச்சை நிறத்திலும், 46 பங்குகள் சிவப்பு நிறத்திலும் முடிந்தன. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,018.20 புள்ளிகள் அல்லது 1.32 சதவீதம் சரிந்து 76,293.60 ஆகவும், நிப்டி 309.80 புள்ளிகள் அல்லது 1.32 சதவீதம் சரிந்து 23,071.80 ஆகவும் இருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசஸ், கிர்சம், டிரென்ட், பார்தி ஏர்டெல் ஆகிய பங்குகளின் விலை ஏற்றத்துடனும், அப்பல்லோ ஹாஸ்பிட்டல், ஐஷர் மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், கோல் இந்தியா, பாரத் எலக்ட்ரானிக் ஆகிய பங்குகளின் விலை சரிந்தும் வர்த்தகமானது.
வங்கி, ஆட்டோ, மெட்டல் மற்றும் ஐடி பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. மேலும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவு இல்லாதது, அமெரிக்காவின் வர்த்தக கொள்கை, எப்.ஐ.ஐ., வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக பங்கு வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்துள்ளன.
![KRISHNAN R KRISHNAN R](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![ஆரூர் ரங் ஆரூர் ரங்](https://img.dinamalar.com/data/uphoto/271873_205342590.jpg)
மேலும்
-
விசிக நிர்வாகி தன்னை தாக்கியதாக புகார் கூறிய போலீஸ் பெண் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
-
சாகும் வரை சிறை தண்டனை;பலாத்கார வழக்கில் சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பு
-
இந்திய இன பசு ரூ.40 கோடிக்கு விற்பனை; கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு!
-
பொய் சொல்லி அரசியல்: அமைச்சர் மகேஷ்க்கு அண்ணாமலை கேள்வி
-
எஸ்.பி.பி., சாலை வழிகாட்டி பலகை திறப்பு
-
சிவன்மலையில் தைப்பூச தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் இழுத்தனர்