மாணவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

2

சென்னை: பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த 7 ஆம் வகுப்பு மாணவி கவிபாலாவின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் - பரிமளா தம்பதியின் மகள் கவி பாலா,12, பள்ளத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவி கவிபாலாவின் இறப்பு அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரட்டுள்ளார்.

Advertisement