பொய் சொல்லி அரசியல்: அமைச்சர் மகேஷ்க்கு அண்ணாமலை கேள்வி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852243.jpg?width=1000&height=625)
சென்னை: தமிழகத்துக்கான நிதியைப் பிற மாநிலங்களுக்குக் கொடுத்து விட்டார்கள் என்று பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா? என்று அமைச்சர் மகேஷ்க்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
அண்ணாமலை அறிக்கை:
கல்வித் துறையை, ரசிகர் மன்றம் போல நடத்திக் கொண்டிருக்கும் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான அமைச்சர் மகேஷ்க்கு கல்வித் துறை சம்பந்தமான பணிகள் குறித்துத் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.
PMSHRI திட்டத்தில் இணைவோம் என்று உறுதியளித்து விட்டு, அதில் இணையாமல், அந்தத் திட்டத்துக்கான நிதியை வழங்கவில்லை என்று கூறுவதில் வெறும் அரசியலைத் தவிர வேறொன்றுமில்லை. பள்ளி மாணவர்களின் கல்வியில் எதற்கு இந்த நேர்மையற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
உங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை என்றால், விவரம் அறிந்தவர்களிடம் கேட்டாவது தெரிந்து கொள்ள வேண்டும். பிற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியும், வழங்கப்பட்ட நிதியும், அமைச்சர் பகிர்ந்துள்ள அறிக்கையிலேயே இருக்கிறது.
எந்த மாநிலத்துக்குமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்படாமல் இருக்கும்போது, தமிழகத்துக்கான நிதியைப் பிற மாநிலங்களுக்குக் கொடுத்து விட்டார்கள் என்று பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா?
உங்கள் கையாலாகாத்தனத்துக்கு, இன்னும் எத்தனை ஆண்டுகள் மத்திய அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள்?
இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (9)
K.Ramakrishnan - chennai,இந்தியா
11 பிப்,2025 - 22:24 Report Abuse
![K.Ramakrishnan K.Ramakrishnan](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
தமிழ் நிலன் - ,
11 பிப்,2025 - 22:12 Report Abuse
![தமிழ் நிலன் தமிழ் நிலன்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
Vel1954 Palani - ,இந்தியா
11 பிப்,2025 - 22:11 Report Abuse
![Vel1954 Palani Vel1954 Palani](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
Velan Iyengaar - Sydney,இந்தியா
11 பிப்,2025 - 21:56 Report Abuse
![Velan Iyengaar Velan Iyengaar](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Kjp - ,இந்தியா
11 பிப்,2025 - 22:38Report Abuse
![Kjp Kjp](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Kasimani Baskaran - Singapore,இந்தியா
11 பிப்,2025 - 23:05Report Abuse
![Kasimani Baskaran Kasimani Baskaran](https://img.dinamalar.com/data/uphoto/11774_043521289.jpg)
0
0
Reply
N.Purushothaman - Cuddalore,இந்தியா
11 பிப்,2025 - 21:53 Report Abuse
![N.Purushothaman N.Purushothaman](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
11 பிப்,2025 - 21:43 Report Abuse
![Kasimani Baskaran Kasimani Baskaran](https://img.dinamalar.com/data/uphoto/11774_043521289.jpg)
0
0
Reply
Bala - chennai,இந்தியா
11 பிப்,2025 - 21:21 Report Abuse
![Bala Bala](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
மேலும்
-
ஜூனியர்களுக்கு அதிக ஊதியம் சீனியர் எஸ்.ஐ.,க்கள் குமுறல்
-
சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு: அமைச்சர் எச்சரிக்கை
-
காஞ்சிபுரம் முருகன் கோவில்களில் தைப்பூச விழா விமரிசை
-
சிவகார்த்திகேயன் பராசக்தியா? சிவாஜி ரசிகர்கள் கொதிப்பு
-
கானத்துார் ரெட்டிகுப்பத்தில் 34 மாடி குடியிருப்பு அமையுது
-
தைப்பூச விழா கோலாகலம்
Advertisement
Advertisement