குவிந்தனர் பக்தர்கள் அதிர்ந்தது வடபழநி

2




இதுவரை இல்லாத அளவில் இந்த தைப்பூசத்திருவிழாவில் வடபழநி ஆண்டவரை தரிசிக்க பக்தர்கள் திரளாக காவடி எடுத்து வந்ததால் வடபழநியே அதிர்ந்தது.
Latest Tamil News
பல பெரியவர்களுடன் நிறைய சிறுவர்களும் காவடி சுமந்து வந்தனர்,பக்தர் ஒருவர் தனது மார்பில் பலகைகைப் போட்டு அதன் மீது உரல் வைத்து அதில் ஏழு பெண்களைக் கொண்டு மஞ்சள் இடித்து வழிபாடு செய்தார்.
Latest Tamil News
ஒரு பக்தர் முதுகில் இரும்பு கொக்கியை மாட்டி அதன் மறுமுனையை உரல் கல்லுடன் இணைத்து இழுத்துச் சென்றார் இதே போல இரும்பு கொக்கி மாட்டி விநாயகர், முருகன் தேர்களை பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.
Latest Tamil News
காவடி சுமந்து வந்த பக்தர்களுக்கு வழி நெடுகிலும் குளிர்பானம் நீர்மோர் வழங்கினர் சிலர் அவரது பாதங்களை தண்ணீரில் நனைத்து குளிர்வித்தனர்.பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிறைய பெண் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

திரும்பிய பக்கமெல்லாம் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை அதிரச்செய்தது.

Advertisement