பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து

கரூர்: கரூர் அருகே, பழைய பொருட்கள் விற்பனை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் செல்வம் நகரை சேர்ந்தவர் ஜெரால்ட், 45; இவர், அதே பகுதியில் பிளாஸ்டிக், இரும்பு உள்ளிட்ட பழைய பொருட்களை வாங்கி, விற்பனை செய்யும் குடோன் நடத்தி வருகிறார். அந்த பகுதியில் உள்ள, காய்ந்த செடிகளுக்கு மர்ம நபர்கள் நேற்று மதியம் தீ வைத்துள்ளனர். அப்போது வீசிய காற்றில், தீ அருகில் இருந்த குடோனுக்கும் பரவி, பழைய பொருட்கள் எரிய தொடங்கின. கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், செல்வம் நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement