உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை இன்று சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 குறைந்தது!
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852882.jpg?width=1000&height=625)
சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (பிப்.,12) சவரனுக்கு ரூ.960 குறைந்தது. ஒரு கிராம் ரூ.7940க்கும், ஒரு சவரன் ரூ.63,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருவதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (பிப்., 10), 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,980 ரூபாய்க்கும்; சவரன், 63,840 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று(பிப்.,11) தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, எப்போதும் இல்லாத வகையில், 8,060 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 64,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்தது. ஒரு கிராம் ரூ.7940க்கும், ஒரு சவரன் ரூ.63,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு, ரூ. 960 குறைந்து நகை பிரியர்களுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது.
மேலும்
-
இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற இரும்பு பெண்மணி..
-
பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமைய இது நடக்கணும்: சொல்கிறார் இ.பி.எஸ்.,
-
எனக்கு வந்த பத்மஸ்ரீ விருதை அவர் வாங்கிட்டார்; ஒடிசாவில் விசித்திர வழக்கு
-
காரில் கடத்திவரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்
-
அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம்; தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம்: ஐகோர்ட் தீர்ப்பு
-
முயல் ரத்தம் கலந்த ஹேர் ஆயில் பறிமுதல்: 3 கடைகளுக்கு சீல்!