அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி காலமானார்

புதுடில்லி: அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி மகந்த் சத்யேந்திர தாஸ், 85, உடல் நலக்குறைவால் காலமானார்.


உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ராமர் கோவிலின் தலைமை பூசாரி மகந்த் சத்யேந்திர தாஸ். இவர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு மூளையில் ரத்தக் கசிவு பிரச்னையை சரி செய்ய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement