கள்ளக்குறிச்சியில் துயரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மரத்தில் தூக்கிட்டு, முத்து என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டனர்.

இதையடுத்து, குளத்தில் இருந்து முத்துவின் மனைவி தேவி, மகன் பிரவீன்குமார் உடலை போலீசார் மீட்டனர்.
மூன்று பேரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்களா, என்ன காரணம் என்பது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement