பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை கோரி மனு; தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

6

புதுடில்லி: முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி காதர் பாஷா தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பழமையான சிலைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யபட்ட சம்பவத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., காதர் பாட்சா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தன்னை பழிவாங்கும் நோக்கில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த பொன் மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்ததாக காதர்பாட்சா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் காதர் பாஷாவை கைது செய்ய தடை விதித்தது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கைது செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி காதர்பாஷா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement