ஏக்நாத் ஷிண்டேவை புகழ்ந்த சரத்பவார்: உத்தவ் தாக்கரே கோபம்!
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852907.jpg?width=1000&height=625)
மும்பை: மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை தேசியவாத காங்கிரஸ் (சந்திர சரத்பவார் பிரிவு) கட்சி தலைவர் சரத்பவார் புகழ்ந்ததால், அம்மாநிலத்தில் எதிர்க்கட்சி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வின் பட்னாவிஸ் தலைமையில் கூட்டணி அரசு அமைந்துள்ளது. சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டேயும், தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து வந்த அஜித்பவாரும் துணை முதல்வர்களாக உள்ளனர்.
எதிர்க்கட்சி கூட்டணியான 'மஹா விகாஸ் அகாதி'யில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளன.
சரத்பவாருக்கு, அரசியலை தாண்டி பல கட்சிகளின் தலைவர்கள் நண்பர்களாக உள்ளனர். அவர்களை அவ்வபோது சரத்பவார் பாராட்டி பேசி வருகிறார். சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அலுவலகத்திற்கு சென்ற அவர், அந்த அமைப்பை புகழந்து பேசி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் அவரது தலைமையில் செயல்படும் அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாடு அமைப்பின் 98 வது கூட்டம் நேற்று( பிப்.,11) நடந்தது. இவ்விழாவில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு 'மஹாத்ஜி ஷிண்டே ராஷ்ட்ர கவுரவ் புரஸ்கார்' என்ற விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை வழங்கி சரத்பவார் பேசுகையில், ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தபோது நிர்வாகம் மற்றும் வளர்ச்சியில் சிறந்த அணுகுமுறையை கொண்டிருந்தார். எனது சொந்த மாவட்டமான சதாராவில் இருந்து அவர் முதல்வர் ஆனதில் மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கூறினார்.
இந்தப் பேச்சு, 'மஹா விகாஸ் அகாதி' கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. சரத்பவாரின் பாராட்டால் உத்தவ் தாக்கரே அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த விழா நல்லெண்ணத்தில் நடத்தப்பட்டதாக பார்க்கவில்லை. விழாவில் பங்கேற்பதை சரத்பவார் தவிர்த்து இருக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கூட்டணியில் விரிசலை மேலும் அதிகப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
![ஆனந்த் ஆனந்த்](https://img.dinamalar.com/data/uphoto/image_465306_20241023203135.jpg)
![ஷாலினி ஷாலினி](https://img.dinamalar.com/data/uphoto/image_82157_20241126160610.jpg)
மேலும்
-
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது: நாள் குறித்தது நாசா
-
இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா; கில் படைத்த புதிய சாதனை
-
' என்னை சோதிக்காதீர்கள்...': செங்கோட்டையன் வேண்டுகோள்
-
3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு
-
50 ஆண்டுக்கு முன் வெளியான 'ஷோலே' டிக்கெட் வைரல்
-
குஜராத்தில் தொழில்நுட்ப பயிற்சி மையம்: சிங்கப்பூர் நிறுவனத்துடன் அதானி குழுமம் ஒப்பந்தம்