3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852929.jpg?width=1000&height=625)
சென்னை: ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த 3 பேரூராட்சிகளின் வரலாறு, சுற்றுலா ஆகியவற்றின் முக்கியத்துவம், மற்றும் தொழில் பெருக்கத்தை கருத்தில் கொண்டும் நகராட்சிகளாக அமைத்து உருவாக்குவதற்கான உத்தேச முடிவு செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கட்ட அறிவிப்பு வெளியானது.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பெறப்பட்ட அனைத்து கருத்துகளையும் பரிசீலனை செய்த தமிழக அரசு, தற்போது இந்த பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசிதழில் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வார்டு எல்லைகளை வரையறை செய்து, தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (2)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
12 பிப்,2025 - 21:33 Report Abuse
![Ramesh Sargam Ramesh Sargam](https://img.dinamalar.com/data/uphoto/17689_225108121.jpg)
0
0
குமார் - ,
12 பிப்,2025 - 22:36Report Abuse
![குமார் குமார்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
மேலும்
-
இந்தியா இமாலய வெற்றி * கோப்பை கைப்பற்றி அசத்தல் * சதம் விளாசினார் சுப்மன் கில்
-
பாகிஸ்தான் சாதனை வெற்றி: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
-
டிரம்ப் - புடின் தொலைபேசியில் உரை : ரஷ்யா வருமாறு டிரம்ப்பிற்கு அழைப்பு
-
வித்யா 'ஹாட்ரிக்' தங்கம் * தேசிய விளையாட்டு தடகளத்தில்...
-
ஊட்டி லாட்ஜில் கேரளா போலீஸ் தற்கொலை
-
சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா நீக்கம்
Advertisement
Advertisement