குஜராத்தில் தொழில்நுட்ப பயிற்சி மையம்: சிங்கப்பூர் நிறுவனத்துடன் அதானி குழுமம் ஒப்பந்தம்

புதுடில்லி: முந்த்ராவில் உலகின் மிகப்பெரிய கல்வி மையத்தை, சிங்கப்பூர் நிறுவனமான ஐடீஸ் (ஐ.டி.இ.இ.எஸ்) உடன் இணைந்து தொடங்குகிறோம் என்று அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய திறன் மற்றும் வேலைவாய்ப்பு முயற்சியை உருவாக்க அதானி குழுமம் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது. பசுமை ஆற்றல், உற்பத்தி, உயர் தொழில்நுட்பம், தொழில்துறை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு சேவை செய்வதற்கான திறமையானவர்களை உருவாக்க அதானி குழுமம் இன்று சிங்கப்பூரின் ஐ.டி.இ., கல்வி சேவைகள் (ஐ.டி.இ.இ.எஸ்) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தது. இந்த நிறுவனங்கள் இணைந்து, குஜராத் மாநிலம் முந்த்ராவில் மிகப்பெரிய தொழில்நுட்ப பயிற்சி மையம் தொடங்க உள்ளன.
இது குறித்து கவுதம் அதானி சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
'முந்த்ராவில் தொடங்கப்பட உள்ள தொழில்நுட்ப பயிற்சி மையத்தில் ஆண்டுதோறு 25,000க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளிக்கப்படும். இதன்படி, மேக் இன் இந்தியா இயக்கம் விரைவுபடுத்தப்படும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement