2026ம் ஆண்டு இந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கானதாக அமையும்; வெளியுறவுத்துறை

புதுடில்லி: 2026ம் ஆண்டு என்பது இந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கும் புதுமையை உருவாக்கும் ஆண்டாக இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடியின் பிரான்ஸ் சுற்றுப்பயணம் குறித்து அவர் கூறியதாவது: கடந்த சில தினங்களாக ஒருநாட்டின் முக்கியமான தினத்தில், சிறப்பு விருந்தினர்களை அழைப்பது வழக்கமாக மாறி விட்டது. கடந்த ஆண்டு இந்தியாவின் 75வது குடியரசு தின விழாவின் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அந்த வகையில் பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது, இரு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார். நேற்று மட்டும் ஏ.ஐ., மாநாட்டிலும், இருநாடுகள் உறவுகள் குறித்த சந்திப்பிலும் கலந்து கொண்டார்.


பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் இன்று விமானத்தில் கலந்துரையாடினர். இந்தியா - பிரான்ஸ் நாடுகளின் உறவுகள் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கிறது.


இருநாடுகளுக்கு இடையே ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்காற்றுகிறது. 2026ம் ஆண்டு என்பது இந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கும் புதுமையை உருவாக்கும் ஆண்டாக இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், புதுமை, ஸ்டார்ட்அப்ஸ் மற்றும் கல்வியில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, ஐரோப்பா, மேற்கு ஆசியா, இந்தோ - பசுபிக் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் வளர்ச்சிகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் கருத்து பரிமாறிக் கொண்டனர், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement