கேரளா கோவில் திருவிழாவில் யானை தாக்கி 3 பேர் பலி

10

கோழிக்கோடு: கோழிக்கோடு அருகே மணக்குளங்கரை கோவில் திருவிழாவில், இரு யானைகள் மதம் கொண்டு தாக்கியதில் பக்தர்கள் மூன்று பேர் பலியாகினர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே கோயிலாண்டி குருவங்காட்டில் மனக்குளங்கரா கோவில் அமைந்துள்ளது. இங்கு நடந்த திருவிழாவின் போது வாணவேடிக்கையால் மிரண்ட யானை ஒன்று அருகிலுள்ள யானையின் மீது பாய்ந்தபோது பிரச்னை தொடங்கியது.
இதன் விளைவாக, இரண்டு யானைகளும் மதம் பிடித்து தாக்கின. இதனால் பக்தர்கள் எல்லா திசைகளிலும் தெறித்து ஓடினர். யானை தாக்கியதில், லீலா, 65, அம்முகுட்டி அம்மா, 70, மற்றும் ராஜன் என அடையாளம் காணப்பட்டனர். 25 பேர் காயமடைந்த நிலையில், எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.



மேலும் கோவில் கட்டடத்தில் இருந்த அலுவலக கூரையை இடித்து தரைமட்டமாக்கின.

Advertisement