தேசியம்

நேரம் கைகூடியுள்ளது!

ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ளன. மத்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த முடிவை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்த போது, மாநில அந்தஸ்தை விரைந்து வழங்கும்படி கூறியது. தற்போது அதற்கான நேரம் கைகூடிஉள்ளது என நம்புகிறோம்.

ஒமர் அப்துல்லா

ஜம்மு - காஷ்மீர் முதல்வர்,

தேசிய மாநாட்டு கட்சி

விவாதிக்க முடியவில்லை!

வக்பு சட்டத்திருத்த மசோதா பற்றிய பார்லிமென்ட் கூட்டுக்குழு அறிக்கை மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பார்லிமென்ட், விவாதத்துக்கானது; வெளிநடப்பு செய்வதற்கு இல்லை. எதிர்க்கட்சிகளிடம் விவாதிக்க சரியான தகவல்கள் எதுவும் இல்லை.

முரளீதரன்

மூத்த தலைவர், பா.ஜ.,

நாங்கள் இருக்கிறோம்!

டில்லி தேர்தல் முடிவுகள் எந்த வகையிலும் பீஹார் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது. நாங்கள் இங்கு இருக்கும் போது, பா.ஜ., எப்படி ஆட்சி அமைக்க முடியும்? பா.ஜ.,வை பற்றி பீஹார் மக்கள் தற்போது தான் புரிந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஓட்டளிக்க மாட்டார்கள்.

லாலு பிரசாத் யாதவ்

தலைவர்,

ராஷ்ட்ரீய ஜனதா தளம்

Advertisement