செஸ்: குகேஷ் ஏமாற்றம்

ஹம்பர்க்: 'பிரீஸ்டைல்' செஸ் தொடரில் குகேஷ் மீண்டும் தோல்வியடைந்தார்.
ஜெர்மனியில் 'பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ் தொடர் நடக்கிறது. உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், ஐந்து முறை உலக சாம்பியன், நார்வேயின் கார்ல்சன் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.
இதன் காலிறுதியில் தோற்ற குகேஷ், அடுத்து 5 முதல் 8 வரையிலான இடங்களுக்கான போட்டியில் பங்கேற்கிறார்.
இதில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை சந்தித்தார். இருவரும் மோதிய இரு சுற்று போட்டிகளும் 'டிரா' ஆகின. வெற்றியாளரை முடிவு செய்ய 'டை பிரேக்கர்' நடந்தது. இதன் முதல் போட்டி 'டிரா' ஆனது. அடுத்த போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் குகேஷ்.
அடுத்தடுத்து செய்த தவறுகள் காரணமாக, போட்டியின் 33வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியடைந்தார். அடுத்து 7-8வது இடத்துக்கான போட்டியில் ஈரானின் அலிரேசாவை எதிர்கொள்கிறார்.
கார்ல்சன் 'ஷாக்'
அரையிறுதியில் போட்டியில் கார்ல்சன், ஜெர்மனியின் வின்சென்ட் மோதினர். முதல் போட்டியில் கார்ல்சன் தோற்றார். இரண்டாவது போட்டி 'டிரா' ஆக, கார்ல்சன் 0.5-1.5 என்ற கணக்கில் தோல்வியடைந்து, கோப்பை வாய்ப்பை இழந்தார்.

Advertisement