ரூ.23 லட்சம் மோசடியில் 4 பேர் கைது
தேனி:தீபாவளி சீட்டு நடத்தி, 40 பேரிடம், 23.14 லட்சம் ரூபாய் மோசடி செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், மேலக்கூடலுாரை சேர்ந்தவர் தமிழரசி, 64. இவரின் வீட்டருகே சண்முகப்பிரியா, 50, வசிக்கிறார்.
இவர் குடும்பத்தினருடன் இணைந்து தீபாவளி சிறுசேமிப்பு வார சீட்டு நடத்தினார். அவரிடம், தமிழரசி, அவரது குடும்பத்தினர், 4.85 லட்சம் ரூபாய் செலுத்தினர். மேலும், 39 பேர் இணைந்து, 18.25 லட்சம் ரூபாய் செலுத்தினர்.
மொத்தம், 23.14 லட்சம் ரூபாயை பெற்ற சண்முகப்பிரியா, அவரது மகள்கள் மவுனிகா, அஜிதா, மகன் தீபக்ராஜ், அஜிதாவின் கணவர் கர்ணன் ஆகியோர் இணைந்து சீட்டில் மோசடி செய்தனர்.
தமிழரசி புகாரின்படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ஐந்து பேர் மீது வழக்கு பதிந்தனர்.
தீபக்ராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் பெற்ற நிலையில், சண்முகப்பிரியா, மவுனிகா, அஜிதா, கர்ணன் ஆகியோரை நேற்று கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை திறப்பு வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை திறப்பு
-
மூதாட்டியை தள்ளிய போலீஸ் சமூக வலைதளங்களில் வைரல்
-
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறப்பு
-
புற்றுநோய் சிறப்பு மருத்துவர் நாளை புதுச்சேரிக்கு வருகை
-
சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.1.64 கோடி மோசடி
-
த.வெ.க., நிர்வாகி 'போக்சோ'வில் கைது