சென்னை, கோவை, மதுரையில் கூடுதலாக மகளிர் தங்கும் விடுதிகள்

சென்னை:பணிபுரியும் மகளிருக்காக, சென்னை, கோவை, மதுரையில், 26 கோடி ரூபாய் செலவில், கூடுதலாக மகளிர் விடுதிகள் கட்டப்பட உள்ளன.

கல்வியறிவு, குடும்பச் சூழல், சமூக அந்தஸ்து உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் பெண்கள் பணிக்கு செல்வது அதிகரித்து உள்ளது.

நாட்டின் மொத்த பெண் பணியாளர்களில், 41 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர்.

எனவே, பணிபுரியும் பெண்களுக்கு உதவும் வகையில், சமூக நலத்துறையின் கீழ் தமிழக பணிபுரியும் மகளிர் விடுதி கழகம் இயங்கி வருகிறது.

இதன் வாயிலாக, சென்னை, மதுரை, கோவை நகரங்களில் கூடுதலாக மகளிர் விடுதிகள் கட்ட அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, 26 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

Advertisement