நீதிபதி மீது செருப்பு வீச்சு

ஹைதராபாத், தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில், பிப்., 11ல் குற்றவாளி ஒருவருக்கு கொலை முயற்சி வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மற்றொரு கொலை வழக்கு விசாரணைக்காக, அதே நபர், நேற்று அதே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, தனக்கு ஆயுள் தண்டனை விதித்த ஆத்திரத்தில், பெண் நீதிபதி மீது, அந்த குற்றவாளி செருப்பை வீசினார். கோர்ட்டுக்குள்ளேயே நடந்த இந்த சம்பவத்தில், நீதிபதி மீது செருப்பு விழவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த வழக்கறிஞர்கள், அந்த நபரை அடித்து உதைத்தனர். போலீசார் தலையிட்டு அவரை மீட்டனர்.

Advertisement