பெண்ணிடம் அத்துமீறல் கோடம்பாக்கம் நபர் கைது

கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண்; வீட்டு வேலை செய்து வருகிறார். இவருக்கு கோடம்பாக்கம், காமராஜர் காலனியைச் சேர்ந்த போபண்ணா ராஜேஷ் கண்ணா, 35, என்பவர், பல நாட்களாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கடந்த 9ம் தேதி, அப்பெண் தான் வேலை செய்யும் வீட்டிற்கு வெளியே, குப்பை கொட்ட சென்றுள்ளார். அங்கு வந்த போபண்ணா ராஜேஷ் கண்ணா, அவரது கையை பிடித்து தகாத முறையில் நடக்க முற்பட்டுள்ளார். அப்பெண் அலறவே, கீழே தள்ளி, கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார்.

விசாரித்த கோடம்பாக்கம் போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, போபண்ணா ராஜேஷ் கண்ணாவை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Advertisement