கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3854011.jpg?width=1000&height=625)
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள காஞ்சிபுரம் செல்லும் சாலை, எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே, மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தையொட்டி, போக்குவரத்து எச்சரிக்கை தடுப்புகள் இல்லாமல் உள்ளது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி, பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், வாகனங்கள் முன்னே செல்லும் வாகனத்தை முந்தி செல்ல முயலும்போது, எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழ வாய்ப்பு உள்ளது. எனவே, கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தையொட்டி, போக்குவரத்து எச்சரிக்கை தடுப்புகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement