தேர்தல்; 'ஜாக்டோ-ஜியோ' முடிவு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3854030.jpg?width=1000&height=625)
கோவை; அரசு ஊழியர்கள் வரும் தேர்தலில் தி.மு.க.,-அ.தி.மு.க.,வை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
'ஜாக்டோ-ஜியோ' கோவை மாவட்ட நிதிக்காப்பாளர் அருளானந்தம் கூறியதாவது: பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவர தி.மு.க., அரசு ஒரு குழு அமைத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியிலும் குழு அமைக்கப்பட்டது.
'ஏ' கிரேடு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், எம்.எல்.ஏ.,-எம்.பி.,கள் எல்லோரும் பழைய ஓய்வூதியம் திட்டத்தில் வாங்கும்போது, பி, சி, டி கிரேடு ஊழியர்களுக்கு மட்டும் புதிய பென்ஷன் என்பது சர்வாதிகார போக்கானது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோது, 29 தொகுதிகளில், 5,000 ஓட்டுகளிலும், 14 தொகுதிகளில், 10 ஆயிரத்துக்கும் குறைவான ஓட்டுகள் என, 43 தொகுதிகளிலும் சேர்த்து, 1.14 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றனர்.
நாங்கள் குடும்பத்துடன் ஓட்டு போடவில்லையேல் இந்த ஆட்சி அமைந்திருக்காது. அரசு ஊழியர்கள் சம்பளத்தில், 10 சதவீதம் பிடித்தனர். அரசும், 10 சதவீதம் செலுத்துகிறது. எனவே, வட்டி தருவதாக, 23 ஆண்டுகளாக இந்த ஆட்சியாளர்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை பிடித்து, நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.வரும் தேர்தலில் தி.மு.க.,வுக்கும் எங்களது ஓட்டுக்கள் விழாது; முன்பு துரோகம் செய்த அ.தி.மு.க.,வுக்கு விழாது. எங்களது பார்வை புதிதாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.