கைதான போது எலும்பு முறிவு; சிகிச்சையிலிருந்த ரவுடி இறப்பு

கரூர்; கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே கருப்பத்துாரை சேர்ந்தவர் வெட்டு சங்கர், 35; இவர் மீது கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் அடிதடி, கொலை, கொள்ளை என, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரவுடி பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது. கடந்த, 6ம் தேதி கருப்பத்துாரை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும், சங்கருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சங்கர், வாழை இலை அறுக்கும் கத்தியால் தாக்கியதில் நாகராஜ் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

லாலாபேட்டை போலீசார், பிள்ளாபாளையம் பகுதியில் சங்கரை கைது செய்ய முயன்றபோது, தப்பிக்க அருகில் உள்ள பாலத்தில் இருந்து குதித்தார். இதில் அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று உயிரிழந்தார். லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement