சி.பி.எஸ்.இ., மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ப்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுவிக்காடு பிரைம் என்ற தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளியில், 16 மாணவர்கள், 3 மாணவியர் என, 19 பேர் பத்தாம் வகுப்பு படித்தனர்.இந்த பள்ளிக்கு சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் இல்லாததால், மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.


பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர் பிப்., 14ல், கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர். அப்போது, சமச்சீர் கல்வி வாயிலாக நடத்தப்படும் மாநில கல்வி வாரிய தேர்வு எழுத, 19 மாணவர்களுக்கும் சிறப்பு விதிகள் பெற்றுக் கொடுப்பதாக, கலெக்டர் தெரிவித்தார்.


இதன்படி, 19 மாணவர்களும், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதும் வகையில், தனி வகுப்பறையை உருவாக்கி, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்று முதல் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement