சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி

தேனி : மாவட்டத்தில் உள்ள சுயஉதவிக்குழுவினருக்கு மாவட்டவழங்கல் அலுவலகம் சார்பில் வட்டாரம் வாரியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் நுகர்வோரின் கடமைகள், பொருட்கள் தயாரிப்பு தேதி, கலாவதி தேதி பார்த்து வாங்குதல், நுகர்வோர் சட்டங்கள் பற்றி விளக்கப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நுகர்வோர் அமைப்பினர், பி.டி.ஓ.,க்கள், வழங்கல்துறை அலுவலர்கள் பயிற்சி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisement