வர்த்தக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இருப்பது அவசியம்

ஊட்டி; ஊட்டியில் அமைச்சர் சாமிநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஊட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. சட்டசபை தேர்தலை எதிர் நோக்கி உள்ள நிலையில், இங்கு விட்டு போன வளர்ச்சி பணிகளை விரைவாக மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் ஆய்வு செய்யப்படும்.

தமிழில் பெயர் எழுதாத கடைகளில், தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்த குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்துவர். தொடர்ந்து, தமிழில் பெயர் பலகை எழுதாத கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement