ஓய்வூதியர்களின் கருத்துகளை கேட்க வேண்டும்: அனிபால் கென்னடி
புதுச்சேரி: ஓய்வூதியர்களின் கருத்துகளை கேட்டறிந்து காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய ஓய்வூதிய திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனைவரும் சேர வேண்டும் என்பது விதியே தவிர சேராமல் இருக்க மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு சுதந்திரம் உண்டு.
அதன்படி இத்திட்டத்தில் புதுச்சேரியில் விரிவாக்கம் செய்யும்போது அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் கருத்துகளை கேட்டறிந்து செயல்படுத்தி இருக்க வேண்டும். அப்படி செய்யப்படவில்லை.
புதுச்சேரி அரசு இந்தத் திட்டத்தில் அனைவரும் சேர வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. சேர விரும்பாத ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் மருத்துவ உதவியாக வழங்கி வருவதை நிறுத்தாமல் வழங்க வேண்டும்.
ஓய்வூதியதாரர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். இதுகுறித்து புதுச்சேரி அரசு ஓய்வூதியர் சங்கத்துடன் விவாதித்து, முடிவு எடுக்க வேண்டும். தற்போது வழங்கப்படும் 1,000 ரூபாயை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி இன்று ஆரம்பம்; சாதிக்குமா இந்திய அணி?
-
சி.பி.எஸ்.இ., மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ப்பு
-
18 படிகளில் ஏறியதும் நேரடி ஐயப்ப தரிசனம்: மார்ச் 14 முதல் 6 நாட்கள் சோதனை முறையில் அமல்
-
ஆட்டோவில் செல்ல செயலி; 1.5 கி.மீ.,க்கு ரூ.50 கட்டணம்?
-
சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி
-
திருவெற்றியூர் கண்மாய் கலுங்கை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவு