ெஹல்மெட் அணிய சீனியர் எஸ்.பி., அறிவுறுத்தல்
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த இரண்டு சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டியதால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சீனியர் எஸ்.பி., பிரவின் திரிபாதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
புதுச்சேரி போக்குவரத்து காவல் துறை தெற்கு மற்றும் மேற்கு சரகத்தில் நடந்த, இரண்டு சாலை விபத்துகளில் நான்கு பேர் இறந்தனர். வில்லியனுார் - பாகூர் மெயின் ரோடு கோர்க்காடு மாரல் வித்யா மந்திர் பள்ளி அருகில், மினி லாரியில் இருசக்கரன் வாகனம் மோதியதில், கோர்க்காடு புதுநகரைச் சேர்ந்த ராமதாஸ், 52, என்பவர் உயிரிழந்தார்.
அதேபோல், புதுச்சேரி துத்திப்பட்டில் இரவு 9.45 மணிக்கு நடந்த சாலை விபத்தில், கடப்பேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் 27, செந்தில் 42, குணசேகரன் 24, ஆகியோர் அதிவேகமாக பைக்கில் சென்று, சாலையோரத்தில் நின்ற டாரஸ் லாரியிங் மீது மோதி மூவரும், சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
விபத்துகளில் இறந்த 4 பேரும் தலைக்கவசம் அணிந்திருந்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருக்காது. தலைக்கவசம் அணியாததாலேயே அவர்கள் உயிர் இழந்துள்ளனர். சாலை விபத்து எப்போது வேண்டுமானாலும் நடக்கும். பைக்குகளை இயக்கும்போதும், பைக்கில் அமர்ந்து பயணிக்கும் போதும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும்.
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி இன்று ஆரம்பம்; சாதிக்குமா இந்திய அணி?
-
சி.பி.எஸ்.இ., மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ப்பு
-
18 படிகளில் ஏறியதும் நேரடி ஐயப்ப தரிசனம்: மார்ச் 14 முதல் 6 நாட்கள் சோதனை முறையில் அமல்
-
ஆட்டோவில் செல்ல செயலி; 1.5 கி.மீ.,க்கு ரூ.50 கட்டணம்?
-
சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி
-
திருவெற்றியூர் கண்மாய் கலுங்கை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவு