பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் குமணன்,60; இவரது மனைவி சுசிலா,55; குமணனுக்கும், நல்லவாடு பகுதியை சேர்ந்த புத்துப்பட்டான் என்பவருக்கும் இடையே, சீட்டு பணம் கொடுப்பது தொடர்பாக பிரச்னை எழுந்து, முன் விரோதம் இருந்தது.

நேற்று முன்தினம், புத்துப்பட்டான் சீட்டு பணம் கேட்டு, சுசிலாவிடம் தகராறு செய்தார். அப்போது ஆத்திரமடைந்த அவர், சுசிலாவை தாக்கி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், புத்துப்பட்டான் மீது தவளக்குப்பம் போலீசார், வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement