மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சரிடம் மனு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3854284.jpg?width=1000&height=625)
புதுச்சேரி: இலங்கை சிறையில் உள்ள தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்ககோரி புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, டில்லியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்திவரதன் சிங்கை சந்தித்து, மனு அளித்தனர்.
அப்போது, காரைக்கால் பகுதியை சார்ந்த மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது ஏற்படும் சிரமங்களையும் கைது நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும். சமீபத்தில் இலங்கை கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைச்சாலையில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சார்ந்த மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைது நடவடிக்கையின் போது இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம், காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள மீனவர்களிடையே ஒரு அசாதாரணமான சூழல் நிலவி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறித்து மத்திய இணை அமைச்சரிடம் விளக்கினர்.
இதுவரை இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை திரும்ப பெற்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டனர்.
மேலும்
-
சி.பி.எஸ்.இ., மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ப்பு
-
18 படிகளில் ஏறியதும் நேரடி ஐயப்ப தரிசனம்: மார்ச் 14 முதல் 6 நாட்கள் சோதனை முறையில் அமல்
-
ஆட்டோவில் செல்ல செயலி; 1.5 கி.மீ.,க்கு ரூ.50 கட்டணம்?
-
சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி
-
திருவெற்றியூர் கண்மாய் கலுங்கை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவு
-
பூட்டிக் கிடக்கும் பாலுாட்டும் அறை