அனுமதியின்றி தங்கும் விடுதிகள் 'சீல்' வைக்க சென்றதால் பரபரப்பு

அரியாங்குப்பம்: அனுமதி இல்லாமல், நடத்திய தங்கும் விடுதிகளை அதிகாரிகள் சீல் வைக்க சென்ற சம்பவம், பரப்பை ஏற்படுத்தியது.

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் பகுதியில் தங்கும் விடுதிகள், ரிசார்ட், ஓட்டல்கள் உள்ளன. குடியிருப்பு பகுதி அருகே 6 தங்கும் விடுதிகள் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில் முறையாக அனுமதி பெறாமல், இயங்கி வந்தன.

தங்கும் விடுதிகளில், வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கும் சுற்றுலா பயணிகள் மூலம், அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக, ஆணையர் மற்றும் போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தன. அதனை அடுத்து, கொம்யூன் ஆணையர் ரமேஷ், அதிகாரிகளுடன் புதுக்குப்பத்தில், அனுமதியின்றி தங்கும் விடுதிகளில் நேற்று சோதனை மேற்கொண்டார்.

அதில், 6 தங்கும் விடுதிகள் முறையாக அனுமதி பெறாமல், கடந்த இரண்டுகளாக, சுற்றுலா பயணிகள் தங்கி சென்றுள்ளது தெரியவந்தது. அதை தொடர்ந்து, ஆணையர் சீல் வைக்க முயன்ற போது, விடுதி நடத்தும் உரிமையாளர்கள் உறுதிமொழி பத்திரம் மூலம், கால அவகாசம் கேட்டனர்.

அனுமதி பெற்ற பின், தங்கும் விடுதியை நடத்த வேண்டும். அதற்கு முன் நடத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதையடுத்து, விடுதியை சீல் வைக்க ஆணையருடன் வந்த அதிகாரிகள் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement