பள்ளியில் இடிந்து விழுந்த சுவர் அகற்றம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3854290.jpg?width=1000&height=625)
அரியாங்குப்பம்: அரசு பள்ளி, குடிநீர் குழாய் சுவர் இடிந்து விழுந்து, 3 மாணவர்கள் காயமடைந்த சம்பவத்தை அடுத்து, சேதமடைந்துள்ள சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.
தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் அரசு துவக்கப் பள்ளியில், குடிநீர் குழாய் சுவர் இடிந்து விழுந்தது. அங்கு விளையாடிய இரண்டு மாணவர்கள், ஒரு மாணவி படுகாயமடைந்தனர். மூன்று மாணவர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
சபாநாயகர் செல்வம், பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டனர். கடந்த 1991ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடம், பள்ளி வகுப்பறைகள் மிகவும் பலவீனமாக இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை, அருகில் உள்ள சமூதாய நலக்கூடத்திலும், 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களை, நோணாங்குப்பம் அரசு பள்ளியில் மாற்ற சபாநாயகர் செல்வம், இயக்குனரிடம் கேட்டுக் கொண்டார்.
பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் குழாய் சுவர் அதன் அருகே சாயும் நிலையில், இருந்த முன் பக்க சுற்றுச்சுவரையும் நேற்று ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி இன்று ஆரம்பம்; சாதிக்குமா இந்திய அணி?
-
சி.பி.எஸ்.இ., மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ப்பு
-
18 படிகளில் ஏறியதும் நேரடி ஐயப்ப தரிசனம்: மார்ச் 14 முதல் 6 நாட்கள் சோதனை முறையில் அமல்
-
ஆட்டோவில் செல்ல செயலி; 1.5 கி.மீ.,க்கு ரூ.50 கட்டணம்?
-
சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி
-
திருவெற்றியூர் கண்மாய் கலுங்கை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவு