விபத்தில் இறந்தவர் உடலுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வில்லியனுார்: சேதராப்பட்டு அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உடலுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேதராப்பட்டு அடுத்த தமிழக பகுதியான கடப்பேரிக்குப்பத்தை சேர்ந்தவர் காளிதாஸ் மகன் சரண்ராஜ்,24; குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர்கள் அச்சப்பன் மகன் குணசேகரன்,24; மற்றும் குப்பன் மகன் செந்தில்,42; பெயிண்டரான மூவரும் நேற்று முன்தினம் பத்துக்கண்ணு பகுதியில் வேலையை முடித்துவிட்டு, இரவு 9;00 மணிக்கு பல்சர் பைக்கில் கடப்பேரிக்குப்பத்திற்கு புறப்பட்டனர். பைக்கை சரண்ராஜ் ஓட்டினார்.
துத்திப்பட்டு கிராமத்தில் இரும்பு கம்பெனியில் லோடு ஏற்றுவதற்காக சாலையோரம் நின்ற டாராஸ் லாரியின் பின்னால் பைக் மோதியது. அதில் படுகாயமடைந்த மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவலறிந்த வில்லியனுார் போக்குவரத்து போலீசார், மூவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலையில் துத்திப்பட்டு கிராம மக்கள், விபத்திற்கு காரணமான இரும்பு கம்பெனி நிர்வாகம் மற்றும் போலீசாரை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கடப்பேரிக்குப்பம் கிராம மக்கள் பகல் 12:30 மணிக்கு, சேதராப்பட்டு- பத்துக்கண்ணு சாலையில் ஆம்புலன்சில் வந்த சரண்ராஜ்உடலுடன் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் வடக்கு எஸ்.பி வீரவல்லபன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை ஏற்று கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
மேலும்
-
18 படிகளில் ஏறியதும் நேரடி ஐயப்ப தரிசனம்: மார்ச் 14 முதல் 6 நாட்கள் சோதனை முறையில் அமல்
-
ஆட்டோவில் செல்ல செயலி; 1.5 கி.மீ.,க்கு ரூ.50 கட்டணம்?
-
சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி
-
திருவெற்றியூர் கண்மாய் கலுங்கை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவு
-
பூட்டிக் கிடக்கும் பாலுாட்டும் அறை
-
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பஸ் வசதியில்லாமல் மக்கள் அவதி