வள்ளிக்கொடி வன்னியர் திருமண தகவல் மையம் 23ம் ஆண்டு விழா

புதுச்சேரி: வள்ளிக்கொடி வன்னியர் திருமண தகவல் தொடர்பு மையத்தின் 23ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.

புதுச்சேரி, கவுண்டன்பாளையம் வி.வி.பி., நகரில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, உரிமையாளர் துரை ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

பா.ம.க., மாநில அமைப்பாளர் கணபதி, வன்னியர் சங்கத் தலைவர் மதியழகன், ரியல் எஸ்டெட் அதிபர் ராஜகோபால், தொழிலதிபர்கள் குமார், ஆனந்த், பிரகாஷ், சிவபிரகாசம், ஞானவேல், ஜெயக்குமார், மனோகர் மற்றும் வள்ளிக்கொடி நண்பர்கள் தண்டபாணி, ஆறுமுகம், பாண்டுரங்கம், ஜனா, பாண்டியராஜன் மற்றும் அரசியல் நண்பர்கள், பிரமுகர்கள், உறவினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

வள்ளிக்கொடி ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, வள்ளிக்கொடி வன்னியர் தலைமை அலுவலகத்தில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.

Advertisement