பெண்ணிடம் செயின் பறிப்பு சேலம் வாலிபர் கைது

கடலுார்: வடலுாரில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் செயினை பறித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம், தாதகபட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மனைவி ராஜாமணி, 58. இவர் வடலுார் சத்திய ஞானசபையில் சாமி கும்பிட்டுவிட்டு நேற்று அதிகாலை 4.40மணிக்கு ஊருக்கு செல்வதற்காக ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் நடந்து சென்றார்.

அப்போது அந்த வழி யாக வந்த வாலிபர் ராஜாமணி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துக்கொண்டு தப்பியோடினார். உடன் அவர் கூச்சலிடவே ,அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வாலிபரை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வடலுார் போலீசாரின் விசாரணையில், அந்த வாலி பர் சேலம் மாவட்டம், நாவக்குறிச்சியைச் சேர்ந்த பழனிசாமி மகன் ராஜவேல், 32, எனத்தெரிந்தது.

புகாரின் பேரில் வழக்குப் பதிந்து ராஜவேலை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஒருசவரன் தங்கசெயினை பறிமுதல் செய்தனர்.

Advertisement