லட்சுமி சோரடியா பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயந்தி சோரடியா,ராஜலட்சுமி சோரடியா கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

எல்.கே.ஜி., முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு பாராட்டினர். பள்ளி தாளாளர் அசோக்மல் சோரடியா, தலைமைஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement