டோல்கேட்டில் மோதல் இரண்டு பேர் கைது

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே டோல்கேட் ஊழியரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த அகரத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் பாரதிமோகன் 20, கொத்தட்டை டோல் கேட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று பணியில் இருந்த போது சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் சவுந்தர்ராஜன், 34; நண்பர்களான பார்த்திபன், கணேஷ்குமார், ராஜ்குமார் நான்கு பேரும் டி.என்.02.பிஎம். 0229 எண் கொண்ட காரில் சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்ல கொத்தட்டை டோல் கேட் வந்தபோது காரில் இருந்த பாஸ்டேக் ஸ்கேன் ஆகவில்லை. டோல்கேட் ஊழியர் பாரதி மோகன் ஸ்கேன் ஆகவில்லை, ஆதலால் பணம் கொடுங்கள் என கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த சவுந்தர்ராஜன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து பாரதிமோகனை தாக்கினர். உடன் அருகில் இருந்த டோல்கேட் ஊழியர்கள் வந்து சவுந்தர்ராஜன் உள்ளிட்ட நால்வரை தாக்கினர்.

இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் இருதரப்பைச் சேர்ந்த தலா 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து, பாரதி மோகன், 20; சவுந்தர்ராஜன், 34; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement