தி.மு.க., ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழா

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் தி.மு.க., ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழா நடந்தது.

திருநாவலுார் கிழக்கு, தி.மு.க., ஒன்றிய செயலாளர் வசந்தவேல் மகன் டாக்டர் சந்திரபோஸ் - டாக்டர் சுவேதா திருமண விழா, பாகூர், வேதாந்த பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. மணமகன் பெற்றோர் வரவேற்றனர்.

விழாவில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு, சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், கலெக்டர் பிரசாந்த்.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன், வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன், மாவட்ட அவை தலைவர் மணிக்கண்ணன், எம்.பி., க்கள் ஜெகத்ரட்சகன், ரவிக்குமார்.

மாவட்ட பிரதிநிதி ராமச்சந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஏழுமலை, முருகன், ஒன்றிய பொருளாளர் பாஸ்கர், மாவட்ட பிரதிநிதிகள் மதிவாணன், வீரப்பன், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement