ஆட்டோ தொழிலாளர் சங்க கிளை துவக்கம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டில் ஆட்டோ தொழிலாளர் சங்க கிளை துவக்க விழா நடந்தது.

கிளை தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஏழுமலை சங்க கொடி ஏற்றினார். சங்க பெயர் பலகையை ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார் திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் செந்தில், துணை செயலாளர் லோகநாதன், பொருளாளர் ரமேஷ், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பச்சையப்பன், மோகன், சட்ட ஆலோசகர் பிரவீன் வாழ்த்திப் பேசினர்.

புதிய நீர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் தலைவராக செல்வம், செயலாளராக ராஜேஷ், பொருளாளராக சுரேஷ், துணை தலைவர் ராஜா, துணை செயலாளராக விஜயபாஸ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement